உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனதீர இது குறித்துத் தெரிவிக்கையில், இரத்தினபுரி, எலபாத, குருவிட்ட, கஹவத்தை, நிவிதிகலை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மலைப்பாங்கான பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஏற்கனவே மண்சரிவு அறிகுறிகள் தென்பட்ட இடங்கள் மீண்டும் சரிவடையும் அபாயம் காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள், மின்கம்பங்கள் அல்லது மதில்கள் சாய்வடைதல், தரை மட்டத்திலிருந்து திடீரென நீர் ஊற்றுகள் தோன்றுதல் அல்லது கிணற்று நீர் நிறம் மாறுதல் ஆகிய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மக்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அபாய வலயங்களில் வசிப்பவர்கள் மற்றும் சரிவான பாதைகளில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0