உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திசைகாட்டி அரசின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவோம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்கும் திசைகாட்டி அரசின் செயற்பாடுகளை முறியடிக்க, அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

“மோசடியான திசைகாட்டி அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக – மாபெரும் மக்களின் குரல்” எனும் தொனிப்பொருளில் பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில் சாகர காரியவசம், அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கபில சந்திரசேனவின் மரணம் குறித்துப் பேசிய அவர், “கபில சந்திரசேனவின் மரணம் தற்கொலையா? அல்லது அவர் திட்டமிட்ட முறையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா? என்ற பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

முன்னைய ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் சேர்க்குமாறு ரங்க திஸாநாயக்க தன்னை அச்சுறுத்தினார் என்று கபில சந்திரசேன ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்திருந்தார்.

கபில சந்திரசேனவின் பிணை விவகாரத்தில் ரங்க திஸாநாயக்க தலையிட்டு வினோதமான கோரிக்கைகளை முன்வைத்தார் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சாடினார்.

“மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக நிலக்கரி முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் அளிக்கப்பட்டாலும், பொலிஸாரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் மௌனம் காக்கின்றன. ஆனால் மற்றவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0