சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது.!
குடா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதில்வெவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், எதில்வெவ பகுதியைச் சேர்ந்த 26 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குடா-ஓயா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.