உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நாட்டில் இருவேறு இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 17 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது 14 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்ட 12 சீனப் பிரஜைகள் மற்றும் 2 மலேசிய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகாபுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருகோணமலை பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது, விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 மற்றும் 50 வயதுடைய 3 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான மேலதிக விசாரணைகளில் களுத்துறை வடக்கு பொலிஸாரும் திருகோணமலை பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0