உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ளார். நேற்று 14 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில், சிறுமியை ஆங்கில வகுப்பிற்காக அவரது தந்தை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

மழை காரணமாக வகுப்பு நடைபெறாததால், நகரில் உள்ள தனது உறவினர் (சிறிய தாயார்) வீட்டில் சிறுமியை விட்டுவிட்டு தந்தை கடைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில், சிறுமி வீட்டிற்கு வரவில்லை என உறவினர் தகவலளித்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.

தந்தை வருவதைக் கண்டதும் அங்கு நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகமாகத் தப்பியோடியது. சந்தேகமடைந்த தந்தை தனது காரில் அதனைத் துரத்திச் சென்று, ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மடக்கிப் பிடித்தார்.

இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த இளைஞன் அதனை விட்டுவிட்டுத் தப்பியோடினான். முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட தந்தை, அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.

சம்பவம் இடத்திற்கு முச்சக்கர வண்டியை மீட்க வந்த மற்றொரு இளைஞன், தனக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளைத் தெரியும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 21 வயதுடைய பிரதான கடத்தல்காரனை பொலிஸார் இரவு 11.00 மணியளவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு நகரில் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்லும் 15, 16 வயது சிறுமிகளைக் குறிவைத்து, அவர்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் இளைஞர் குழு ஒன்று செயற்பட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0