உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

லசந்த படுகொலைக்கு 17 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
16 பார்வைகள்

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

‘லசந்தவுக்காக நாம்’ அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“அன்று மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவைச் சுட்டது யார் என்பது எமக்கும் தெரியும், பொலிஸாருக்கும் தெரியும். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. பொலிஸார் நினைத்தால் நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாளில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இதில் ஏன் மௌனம்?

லசந்தவின் நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சாட்சிகளை மாற்றியமைத்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்கள் (ரணவிருவோ) ஆக முடியாது. அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக இராணுவத்தின் ஒரு சிறு குழு செய்த தவறுகளை மறைத்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். இதனைத் திருத்தாமல் நாடு முன்னேறாது.” – என்றார்.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர் என்றும், சாட்சிகள் இருந்தும் ஏன் எவரும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

லசந்த சர்வதேச அளவில் வீரராகப் போற்றப்படும் நிலையில், சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டதும் பத்திரிகை நிறுவனம் எரிக்கப்பட்டதும் வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தபோது, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும், அந்த நம்பிக்கையில் தான் காத்திருப்பதாகவும் லால் விக்கிரமதுங்க மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0