உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால் கோட்டாவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படுமாம் ; அஜித் பி பெரேரா எம்.பி. கடும் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் ஆதிக்கத்திலிருந்து நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதே ஜனநாயகத்தின் அடிப்படை. நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு  திட்டமிட்ட பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது.

வழங்கப்படவிருக்கும் தீர்ப்புகளின் இறுதி முடிவுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கூறி வருகின்றார். அதேபோல், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நிலக்கரி ஆணைக்குழு வழங்கவுள்ள தீர்ப்பை, ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா காலக்கெடுவுடன் பிரகடனப்படுத்துகின்றார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அனைத்தையும் செய்துவிடலாம் என்று நினைப்பது வரலாற்றுத் தவறாகும். கோட்டாபய ராஜபக்ஷவிடமும் அந்தப் பெரும்பான்மை இருந்தது, ஆனால் இறுதியில் அவரால் இந்த நாட்டில் வாழ முடியாமல் போனதை மறந்துவிடக் கூடாது.

நீதிமன்றச் சுதந்திரம் குறித்து நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தைக் கோரியபோது, அரசு தனது பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரித்துள்ளது.

மே முதலாம் திகதி நீதிபதிகளின் கண்ணியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, ஜனாதிபதி தற்போது சட்டத்தின் சமத்துவம் பற்றிப் பேசுகின்றார். நாட்டு மக்கள் ஒன்றும் தெரியாத ஏமாளிகள் அல்லர். எனவே, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குப் போலியான உபதேசங்களை வழங்க வேண்டாம்.” – என்று அஜித் பி. பெரேரா கேட்டுக்கொண்டார்.

மக்களின் கௌரவத்தையும் நீதிமன்றச் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தவறும் இந்த அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியுடன் களமிறங்குவோம் என்றும் அவர் இதன்போது சூளுரைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

2 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0