உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதல்: இரு சாரதிகளும் பரிதாபகரமாக உயிரிழப்பு !

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

காலி மாவட்டம், எல்பிட்டி பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு எல்பிட்டி பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் அதிவேகமாகப் பயணித்தபோது, எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் கோரத்தால் இரண்டு ஓட்டோக்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு ஓட்டோக்களின் சாரதிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

58 0 0