உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முஜிபுர் CID யில் முறைப்பாடு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர்.

நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதைக் கேட்கும்போது அங்கேயும் ஒரு மோசடி நடந்துள்ளது என்பது புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இந்த டெண்டரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் அந்த குரல் பதிவில் உள்ளது.

எனவே, அந்த குரல் பதிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.

அந்த குரல் பதிவில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

இதன் மூலம் அங்கேயும் தெளிவாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பது உறுதியாகிறது என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0