உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மக்களின் உணர்வுகளை மதிக்காத அபிவிருத்திக் குழுத் தலைவர்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மக்களின் நலன்களையும், அவர்களது எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்களின் ஆற்றல், ஆளுமை மற்றும் அக்கறை என்பன மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அண்மைக்காலமாக தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன என்றும், உருப்படியான தீர்வுகள் எட்டப்படுவதில்லை என்றும் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு, ஒருங்கிணைப்புக் குழுத் தலைமை தட்டிக்கழிக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. இருதரப்பு முரண்பாடுகளால் எவ்வித முன்னேற்றமும் இன்றி அரச நிதி மாத்திரம் வீணடிக்கப்பட்டு கூட்டங்கள் நிறைவடைவதாக மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,
“புதிய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களின் நலன்களைப் பேணக்கூடிய அல்லது பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய எவ்விதமான வினைத்திறன் மிக்க அணுகுமுறைகளையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் என்பவை அந்தந்தப் பகுதியின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெறுவதற்காக நடத்தப்படுபவை. ஆனால், தற்போது நடத்தப்படும் கூட்டங்களில் பொதுமக்கள் தமது நியாயமான பிரச்சினைகளை முன்வைக்கவோ அல்லது தீர்வுகளைப் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், நேரடிச் சந்திப்புகள் மூலமாகவும் எனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் பொறுப்பில் இருந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்க எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாக அனுமதித்திருந்தோம். ஆனால் இன்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஊடகவியலாளர்களுக்குச் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதும், அவர்கள் தட்டிக்கழிக்கப்படுவதும் துரதிஷ்டவசமானது.

மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நான் பேச்சு நடத்தவுள்ளேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0