உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோத உந்துருளிகள் சிக்கின.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக உந்துருளிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த உந்துருளிகளில் ஒன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குலசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) மாலை பிலியந்தலை கிளை வீதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு, இந்த அதிவேக உந்துருளிகளுடன் அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நால்வர் இந்த உந்துருளி பாகங்களை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்ததாகவும், தான் அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0