உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நெருக்கடியில் மக்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் கூறியதாவது, நாளுக்கு நாள் மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதுடன், எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகி வருகின்றனர்.


சிறுவர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட ஆபத்தான நிலையில் உள்ள தரப்பினருக்காக யூனிசெப் அமைப்புடன் இணைந்து விசேட நலன்புரித் திட்டம் ஒன்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், விவசாயத் துறையில் நிலவும் உரம், விதைகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உடன் கலந்தாலோசித்து விவசாயத்தை மீளக் கட்டியெழுப்ப தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மீனவர்கள், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து பொருளாதாரத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விரிவான தேசிய நலன்புரித் திட்டம் அவசியம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அத்துடன், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவசர தீர்வுகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0