உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


அசங்க எஸ். போதராகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், சந்தேகநபருக்கு தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டதுடன், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் 9 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.2015 முதல் 2026 வரை வருமானத்திற்குப் புறம்பாகச் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்துகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், குடும்பத்துடன் பல முறை வெளிநாட்டு பயணங்கள், மனைவியின் வங்கிக்கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் இருப்பது மற்றும் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள வணிக முயற்சி ஆகியவை அடங்கும்.


இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோரிக்கை விடுத்திருந்தபோதிலும், பாதுகாப்பு தரப்பின் பிணைக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்க உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0