உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் தனது முத்திரையை பதித்துள்ளது.

அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டிகள் – 2025 இல் குறித்த பாடசாலை மாணவர்கள் வியக்கத்தக்க வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

தரம் 9 மற்றும் 10 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டு முதலாம் இடங்கள் என மொத்தமாக 10 இடங்களை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கும், திறமையை வெளிப்படுத்திய அன்பு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“முயற்சி திருவினையாக்கும்” என்பதற்கு இணங்க, எமது பாடசாலையின் பெயரை அகில இலங்கை ரீதியாக நிலைநாட்டிய இந்த வெற்றியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த பாராட்டுகளை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், உப அதிபர், பகுதி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

64 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0