உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய மீனவர்கள் 25 பேர் நிபந்தனையின்றி விடுதலை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மேலும் 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சமயம், கடற்படையினரால் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்று முதல் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மல்லாகம் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி மீனவர்களுக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை எனத் திணைக்களம் சார்பில் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 25 மீனவர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, மேற்படி 12 மீனவர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், கைது செய்யப்படும் மீனவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இரு வேறு நீதிமன்றங்களில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

62 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

35 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

86 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

61 0 0