வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 30 பாரிய குற்றவாளிகள்.!
வெளிநாடுகளில் மறைந்த குற்றவாளிகளைக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர், நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான மிதிகம சூட்டி (பிரபாத் மதுசங்கம்) குறித்த தகவலையும் தெரிவித்தார்.
மிதிகம சூட்டி கொலை, பாரிய கொள்ளை, ஆயுதக் கடத்தல், துப்பாக்கி வைத்திருத்தல், கள்ளப் பணப் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் தொடர்புடையவர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகள் காரணமாக,சிவப்பு அறிவித்தல் மூலம் மேலும் சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்கிறது. இதுவரை 88 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.