உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்; பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார்.

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0