உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாடு தழுவிய போதைப்பொருள் வேட்டை; ஒரே நாளில் 980 பேர் வசமாகச் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியத் திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 980 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் குறித்துப் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 965 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 528 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 362 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 445 கிராம் கஞ்சா, 17 கஞ்சா செடிகள், ஒரு மில்லிகிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 626 போதை மாத்திரைகள், 237 கிராம் மதனமோதகம் மற்றும் 4 கிலோகிராம் 195 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0