உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியின் முதற்கட்ட அகழ்வுப் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை ஊடாகக் காத்தான்குடிக்கு வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான நீண்டகால வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து இந்த அகழ்வுப் பணிக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிவான் ரி. பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணியின் போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், காணாமற்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஊழியர்கள், பாதுகாப்பு கடமைகளுக்காகப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தத்தமது அன்புக்குரியவர்களின் எச்சங்கள் அடையாளம் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அகழ்வுப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0