உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தேசிய பாதுகாப்பு இன்று பாரிய அச்சுறுத்தலில்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

“கடந்த காலங்களில் வெற்றி கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று சிதைவடைந்து வருகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் தற்போதைய மத்திய கிழக்கு போர் வரை கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட ஐந்து முக்கிய சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்பு அனைத்து மட்டங்களிலும் கேள்விக்குறியாகியுள்ளது” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர ஜயசேகராம விகாரையில் இன்று நடைபெற்ற ரஜவத்தே வப்ப தேரருக்கு மியன்மாரின் அக்கமஹா சத்தம்ம ஜோதிக தஜ கௌரவ நாமம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“தேசிய பாதுகாப்பு என்பது இராணுவ ரீதியிலான பாதுகாப்பு மட்டுமல்ல; பொருளாதார, சமூக, அரசியல், சுகாதார, கல்வி மற்றும் வாழ்வாதாரம் என அனைத்துத் துறைகளும் இன்று பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன.

முப்பது ஆண்டுகால யுத்தத்தின் போது மகா சங்கத்தினர் எத்தகைய தலைமைத்துவத்தை வழங்கினார்களோ, அதேபோன்றதொரு வழிகாட்டல் தற்போதைய இக்கட்டான சூழலிலும் நாட்டுக்கு அவசியமாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்து வரும் தாக்குதல்களால் ‘பாப் அல் மந்தப்’ நீரிணை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கைக்குப் பாரிய பேரிடராக மாறும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல் எரிபொருள் விநியோகம் வரை சகல துறைகளும் இதன் மூலம் முடக்கப்படலாம்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அரசியலைத் தள்ளிவைத்துவிட்டு, மதத் தலங்களை மையமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். யுத்த காலத்தில் கிராமிய மற்றும் நகர மக்களுக்கு இடையில் இருந்த பிளவுகளை நீக்கி மகா சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இன்று அதைவிடப் பெரிய சவால்கள் எழுந்துள்ளன.

எனவே, மகா சங்கத்தினர் தலைமையில் அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, இந்தப் பேராபத்துகளில் இருந்து நாட்டை மீட்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும். எம்மிடம் உள்ள அறிவுத்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த சவால்களை நாம் வெற்றிகொள்வோம்.” – என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0