கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!
பாணந்துறை – பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிங்வத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், சந்தேகநபரால் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே உயிரிழப்பிற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பிங்வத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.