உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு அவசர உதவி; எரிபொருளுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் ‘ஹரி ஆனந்த’ என்ற எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது என்று துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பலில் 18 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல், 18 ஆயிரம் மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் என மொத்தம் 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் பலனாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு இந்த எரிபொருளை வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் வெவ்வேறு நாடுகளிலிருந்து மேலும் 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதுள்ள டீசல் கையிருப்பு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை போதுமானது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் மாதம் வரை விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதியளவு பெற்றோல் கையிருப்பு இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0