உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.ஸ்ரீ ரஞ்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியில் பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், நாவற்காடு ஆகிய இடங்களிலேயே மேற்படி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தங்கூஸ் வலைகள், முக்கூட்டு வலைகள், தொட்டாண்டி வலைகள் ஆகிய தடை செய்யப்பட்ட வலைகளே இவ்வாறு கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த வலைகளை அழிக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வலைகளின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் என திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

2 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0