உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலஞ்சம் வாங்கிய வருமான வரி பரிசோதகர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மொனராகலை பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான வரி பரிசோதகர் ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்தல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வ விடயம் ஒன்றைச் சாதகமாகச் செய்து கொடுப்பதற்காக, மேற்படி அதிகாரி 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இரகசிய சோதனை நடவடிக்கையின்போது, குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்ட வேளையில் அவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரான அதிகாரி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

2 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0