உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

இலங்கையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் படி, பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மின்சார விநியோகம்: மின்சாரம் உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான அனைத்துச் சேவைகள்.

எரிபொருள் விநியோகம்: பெற்றோலியப் பொருட்கள் மற்றும் திரவ எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விநியோகம் மற்றும் போக்குவரத்துச் சேவைகள்.

சுகாதாரச் சேவைகள்: அரசாங்க வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய மருத்துவ நிறுவனங்களால் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் சிகிச்சை சேவைகள்.

சட்ட அதிகாரம்
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்புக்குத் தடை
இந்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது. இதன் மூலம், குறித்த அத்தியாவசியத் துறைகளில் பணிபுரிவோர் எவ்வித பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளிலோ அல்லது சேவைத் தடைகளிலோ ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி நடவடிக்கையின் நோக்கமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

2 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0