கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் கைது.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் கட்டுத்துவக்கு வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ரி.அபேரட்னவின் தலைமையில் சென்ற பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணையின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.