உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க இந்தியாவின் முறையைப் பின்பற்றுங்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிரடியாக உயரும் போது, உள்நாட்டில் விலையை நிலைப்படுத்துவதற்காக இந்தியா பின்பற்றும் வரி திருத்த முறையை இலங்கையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“இந்தியா தனது எரிபொருள் வரியைக் குறைத்தது உடனடி விலைக்குறைப்புக்காக மட்டுமல்ல; மாறாக, உலகளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் விலை மாற்றங்களின் போது சந்தையை நிலைப்படுத்தவும், மேலதிக விலையேற்றங்களைத் தடுத்து நிறுத்தவுமே ஆகும். இலங்கை முன்னோக்கிச் செல்லும் போது, அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நிதிக் கட்டுப்பாடு என்பது முக்கியமானதொன்றாகும். எனினும், இந்தியாவின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் போல், அதிகப்படியான வரிச் சுமைகளைக் குறைப்பது முதலீடுகளை ஊக்குவிக்கவும், மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்து நீண்டகால பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கவும் உதவும்.

இலங்கைக்கு 38 ஆயிரம் தொன் எரிபொருளை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நெருக்கடியான காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் முதல் பொருளாதார உதவிகள் வரை வழங்கியதன் மூலம், இந்தியா இலங்கையின் முதன்மைத் தோழனாகத் திகழ்கின்றது.

இது இந்தியாவின் அயலகத்திற்கு முன்னுரிமை கொள்கையின் உண்மையான பிரதிபலிப்பாகும். பிராந்தியத்தின் நலனுக்காக நாடுகள் மூலோபாய பங்காளிகளாக இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.” – என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

0 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0