உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஊழலுக்கு எதிரான பிடி இறுகுகின்றது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, தற்போது கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவை மாவட்ட மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ‘ஆளுமைக்கான செயற்றிட்டம் – 2026’ அறிக்கையின்படி இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பிராந்திய அலுவலகம் வீதம் மொத்தம் 24 அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன.

இந்த அலுவலகங்களுக்கான அதிகார வரம்புகள், சட்ட ரீதியான பொறுப்புகள், உத்தியோகத்தர்களின் படிநிலை அமைப்புகள் உள்ளிட்ட விரிவான அதிகாரப் பகிர்வுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான விதிமுறைகளை நீதி அமைச்சு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடும். இதற்காகப் பிரதம நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தப் பிராந்திய அலுவலகங்கள் உத்தியோகபூர்வமாகத் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளன.

எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, ஊதியம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான புதிய விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும். குறிப்பாக, ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறினால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளன.

ஆணைக்குழுவின் ஊழியர்களுக்காக விசேட ‘விருப்ப ஓய்வுத் திட்டம்’ ஒன்றையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

2 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0