உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதி விபத்துக்கள் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“பதிவாகியுள்ள விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுமே அதிகளவில் உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டின் தரவுகளின்படி, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 31 சதவீதமானோர் பாதசாரிகளாவர். எனினும், இந்த ஆண்டு அந்தத் தரவுகளில் சிறியளவு அதிகரிப்பு காணப்படுகின்றது.

வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் போக்குவரத்து ஒழுக்க விதிகளையும், சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும்.

குறிப்பாக பாதசாரிகள் எப்போதும் வீதியின் வலது புறமாக நடக்க வேண்டும். வீதியைக் கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வீதியில் நடக்கும்போதோ அல்லது வாகனங்களைச் செலுத்தும்போதோ கைத்தொலைபேசி பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் சோதனைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட சோதனைகள் தற்போது நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0