உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையில் ‘எதிரி’ கப்பல்களைத் தடுக்க தமக்கு உரிமை உள்ளது – ஈரான் தெரிவிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
81 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் ‘எதிரி’ கப்பல்களைத் தடுப்பது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்று ஈரான் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸூடுடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு கடற்கரை நாடு என்ற அடிப்படையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எதிரிக் கப்பல்களைத் தடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு உண்டு.இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ நடவடிக்கைகளே காரணம்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும்.ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்படவில்லை.சில நட்பு நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நீரிணையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0