உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மற்றவர்களின் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் மோசடி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மற்றவர்களுக்குச் சொந்தமான கியூ.ஆர். குறியீடுகளை தவறாகப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபாலின் தெரிவித்ததாவது:

இந்தப் முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 150-க்கும் மேற்பட்டவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் சில சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகநபர்களைக் கைதுசெய்வதில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.செயலாளர் வறுத்தவரை, சில சந்தர்ப்பங்களில் அறியாமை அல்லது தவறான புரிதல் காரணமாக மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் இந்த முறைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0