ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க தடை தளர்த்தப்பட்டது – தென்கொரியா உறுதி.!
அமெரிக்கா கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் பின்னணியில் உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு தென்கொரியாவானது, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா முதலில் கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளர்த்தியதை தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெயையும் பெற்றோலிய பொருட்களையும் இறக்குமதி செய்யவுள்ளதாக தென் கொரிய வர்த்தக மற்றும் கைத்தொழில் மூலவளங்கள் அமைச்சர் யாங் ஜி-யுக் தெரிவித்தார்.இதுதொடர்பில், சியோல் அரசாங்கம் வொஷிங்டனுடன் உறுதிப்படுத்தியதாக மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க டொலரைத் தவிர்த்த ஏனைய நாணயங்களைப் பயன்படுத்தி ரஷ்ய, எரிசக்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தென்கொரிய பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தியுள்ளது.இம் மாதத்தின் ஆரம்பத்தில் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை விற்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுக்கு அனுமதியளித்திருந்தது.