உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
47 பார்வைகள்

பங்களாதேஷில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த சோகமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.உயிரிழந்தவர்களில் 11 பெண்கள், எட்டு சிறுவர்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர்.

உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (26) உறுதிப்படுத்தினர்.

புதன்கிழமை மாலை சுமார் 5:15 மணியளவில், டாக்கா நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று, தௌலத்தியா படித்துறையில் உள்ள 3 ஆம் எண் மிதவைப் பாலத்திலிருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் குறைந்தது 50 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், விபத்து நடந்த உடனேயே பல பயணிகள் தப்பித்துவிட்டனர்.இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, தீயணைப்புத் துறை மற்றும் பிற தொடர்புடைய முகமைகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் மீட்புப் பணிகளை ஆரம்பித்திருந்தர்.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0