உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் விலை அதிகரிப்பு; அநுர அரசாங்கம் செய்வது ‘கறுப்புச் சந்தை’ சூதாட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அரசாங்கம் மேற்கொண்டுள்ள அசாதாரண எரிபொருள் விலை அதிகரிப்பானது, மக்களைத் துன்புறுத்தி முன்னெடுக்கப்படும் ஒரு “கறுப்புச் சந்தை சூதாட்டம்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது,
“அரசாங்கம் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகளைத் தேக்கி வைத்துவிட்டு, தற்போது புதிய விலையின் கீழ் அதனை விற்பனை செய்து பாரிய இலாபம் ஈட்டுகின்றது. இது திட்டமிட்ட ஒரு கொள்ளையாகும்.

கடந்த சனிக்கிழமையன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மூடி வைத்ததன் நோக்கம், குறைந்த விலையிலான எரிபொருள் விநியோகத்தை முடக்குவதே ஆகும். அந்தப் பழைய கையிருப்பை வைத்துக்கொண்டே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விலையை அதிகரித்துள்ளனர். இது நுகர்வோரை வஞ்சிக்கும் செயலாகும்.

கடந்த காலங்களில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் பேசிய பேச்சுக்களுக்கும், இன்றைய அவரது செயல்பாடுகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இன்று அவர் ஒரு கறுப்புச் சந்தை முதலாளியைப் போலவே செயற்படுகின்றார்.

ஒரே மாட்டை இரண்டு முறை தோல் உரிப்பதைப் போன்றதொரு மோசமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மக்களைப் படுகுழியில் தள்ளியுள்ள இந்த அரசாங்கத்தின் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0