உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ஹட்டன் நகரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகரில் ஆங்கில மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் மருந்தகத்தில் வைத்தியரின் அனுமதிச்சீட்டு இன்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அதற்கு தலைமை வகித்த ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர குறித்த ஆங்கில மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றி உள்ளனர்.

மருந்தக உரிமையாளரை ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0