லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!
இங்கிலாந்தின் எசெக்ஸ் மாநிலத்தில் உள்ள லண்டன் கேட்வே துறைமுகத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சுமார் ஒரு டன் எடையுள்ள கொக்கைய்ன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பனாமாவிலிருந்து வந்த சரக்குக் கொள்கலனில் சிறிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைய்ன் இங்கிலாந்தில் சந்தையில் விற்கப்பட்டிருந்தால், அதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தேசிய குற்றவியல் முகமைச் செய்தியாளர் தெரிவிப்பின்படி, மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த மாதம் தொடக்கத்தில் நடத்தப்பட்ட நாடளாவிய போதைப்பொருள் நடவடிக்கையில் 2,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, அதில் 10 சதவீதம் சிறுவர்கள் உள்ளனர். இந்நிகழ்வுகள், இங்கிலாந்தில் போதைப்பொருள் கண்டுபிடிப்பில்சாதனை அளவு முன்னேற்றம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.