உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எழுத்தை ஆளுகை செய்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் இன்று காலை 08 மணியளவில் தனது 75வது வயதில் நிந்தவூர் இல்லத்தில் காலமானர்.

இவர் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்பு கணவரும், அகீலா, அகீல் ஆகியோரின் பாசமுள்ள தந்தையுமானவர்.

தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைளினது பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய இவர், ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையாளருமாவார்.

சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பணி செய்தவர். ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும், மரியாதையும் பெற்றிருந்த இவர், எழுத்தை ஆளுகை செய்த ஆளுமையாகவும் திகழ்கின்றார்.

பல ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும், செய்திகளை எழுதுவதில் புதிய வடிவங்களையும், சொற்பிரயோகங்களையும் கையாண்டவராவார்.

அதுமட்டுமன்றி சகல அரசியல்வாதிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிய ஒருவராகவும் காணப்பட்டார்.

ஊடகத்துறையில் அச்சமின்றி பணி செய்தார். அவரின் ஊடக ஆளுமை பலரை அச்சம் கொள்ளச் செய்தது. எந்தவொரு அரசியல்வாதியும், ஏனைய துறையினராக இருந்தாலும் அவர்களின் பணி குறித்து கேள்வி எழுப்புவதற்கு தயக்கம் காட்டாத ஊடக உலகின் சிங்கமாக நெஞ்சு நிமிர்த்தி பணி செய்தார்.

அதே வேளை, எல்லோருடனும் மிகவும் அன்பாகவும், சிரித்த மனதுடனும், நகைச் சுவையாகவும் பழகக் கூடியவராகவும் தமது வாழ்வினை முன்னெடுத்தவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷாவிற்கு பின்னர் நிந்தவூர் ரவாஹா பொது மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0