உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெண் போதைப்பொருள் கடத்தல்காரியின் சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் (30 கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் பெருமளவு சொத்துக்களைச் சேர்த்துள்ளார் என்று கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுக்கமைய இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

முடக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் வருமாறு:-

  • கொழும்பு 14 மற்றும் ஜா – எல பகுதிகளில் அமைந்துள்ள சொகுசு வீடுகள்.
  • நான்கு கடைத் தொகுதிகள் மற்றும் பெறுமதிமிக்க காணிகள்.
  • 59 இலட்சம் (5.9 மில்லியன்) ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்த ஆறு வங்கிக் கணக்குகள்.

மேலதிக விசாரணைகளின் போது, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 30 மில்லியன் (3 கோடி) ரூபா பெறுமதியான மற்றொரு சொகுசு வீடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டை 2026 மார்ச் 20 முதல் ஏழு நாட்களுக்கு முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் ஏனைய சொத்துக்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0