உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
44 பார்வைகள்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.


அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 6.6 சதவீதம் குறைந்து 97.56 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது. அதேவேளை, அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் விலை 5.5 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து 87.20 டொலராக வீழ்ச்சி கண்டுள்ளது.


வொஷிங்டன் தரப்பினர் தெஹ்ரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.


எனினும், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட்பாகர் காலிபாஃப், இத்தகைய தகவல்கள் நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளை பாதிக்க உருவாக்கப்படும் போலி செய்திகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த நிலைமை உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.குறிப்பாக, உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு போக்குவரத்தின் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டுள்ளதால், உலக சந்தைகளில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.


இதன் தாக்கமாக உலக நிதிச் சந்தைகளிலும் ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வருகின்றன. மேலும், உலகின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் இந்த மோதலின் பொருளாதார விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0