உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் உரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடையே நேற்று மாலை விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்காசியாவின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினேன். குறிப்பாக, உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும் உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளோம்.” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீட்டு மேலாண்மை மற்றும் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கைக்கான முக்கிய பங்காளியாக இந்தியா தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0