உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரசின் நிர்வாகத் தோல்வியால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அரசின் திட்டமிடப்படாத மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகள்
“மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எச்சரித்தபோது, அரசு அதைக் கேலி செய்தது. ஆனால், அந்த எச்சரிக்கை விடுத்து 12 நாட்களுக்குள்ளேயே மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. முறையான ‘மூலோபாய திட்டமிடல்’ அரசிடம் இல்லாததே இதற்குப் பிரதான காரணமாகும்.

எரிபொருள் மற்றும் நிலக்கரி நெருக்கடி
ரஷ்யாவுடனான நேரடி இராஜதந்திர உறவுகள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு நாம் வழங்கிய ஆலோசனைகளை அரசு ஆரம்பத்தில் நிராகரித்தது. தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்ட பின்னரே ரஷ்ய தூதுவரைச் சந்திக்க முற்படுகின்றனர். அதேபோல், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியும் தரமற்றது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் 135 மெகாவோட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சுமையை இறுதியில் மின் நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது.

விவசாயிகளுக்கும் அச்சுறுத்தல்
எரிபொருளுக்கு கியூ.ஆர். முறைமை கொண்டுவரப்பட்டதைப் போல, அரசின் இப்போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் விவசாயிகளின் உரங்களுக்கும் கியூ,ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏமாற்று வித்தை மற்றும் பழிவாங்கல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு, எவ்வித முன்னாயத்தமும் இன்றி நாட்டை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றது. எதிர்க்கட்சி வழங்கும் நல்ல ஆலோசனைகளைக்கூட ஆணவத்தால் நிராகரிக்கின்றனர். அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பொய்களைப் பரப்புவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர்கள் காட்டவில்லை.” – என்றார்.

டித்வா சூறாவளி பாதிப்பின் பின்னர் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு கோரியபோதும், அதனை ஜனாதிபதி உதாசீனம் செய்தார் என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, அரசியல் பழிவாங்கல்களால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

61 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

59 0 0