உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அமைச்சரின் சகோதரர் விபத்தில் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என்று கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.எம். பியசேன திஸாநாயக்க (வயது 71) என்பவரே இவ்வாறு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நபர் மஹகல்கடவல பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு, உந்துருளியில் மீண்டும் தனது இல்லத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மஹகல்கடவல வளைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைக் கல்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

61 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

59 0 0