உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

உள்நாட்டு சந்தைக்கு 3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

உள்நாட்டு சந்தைக்கு இன்று 3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் மொத்தம் 7,900 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் கோரப்பட்டுள்ளது. கூடுதலாக 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது மாலைதீவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

கோரப்பட்டுள்ள மற்றுமொரு கப்பல், 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்களுடன் மார்ச் 17ஆம் திகதி மாலைதீவை வந்தடைய உள்ளது என்றார்.

இதேவேளை, அண்மையில் இலங்கையை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கும் பணிகளைத் தமது நிறுவனம் தற்போது முன்னெடுத்து வருவதாக லாஃப்ஸ் கேஸ் (Laugfs Gas) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

81 0 0