உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கிம்ஹானியின் கனவை கருக்கிய அதீத சந்தேகம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 25 வயதுடைய யுவதி ஒருவர், அவரது காதலனால் தொழிற்சாலை வளாகத்தினுள்ளேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 5 நாட்களாகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், மேற்படி யுவதியைப் படுகொலை செய்த காதலன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

ஹொரணை – புளத்சிங்கள வீதி, கோவின்ன நாரகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ஆர். கிம்ஹானி பெரேரா (வயது 25) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 4ஆம் திகதி காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற கிம்ஹானி, தொழிற்சாலையின் பிரதான வாயிலூடாக நுழைந்து தனது பையை வைக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த அவரது காதலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கிம்ஹானியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

உயர்தரக் கல்வியை முடித்த பின்னர் ஆடைத் தொழிற்சாலையில் இணைந்த கிம்ஹானிக்கும், அங்கு பணிபுரிந்த பதுளை – கெப்பட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் தொடர்பு இருந்துள்ளது.

அந்த இளைஞன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் கிம்ஹானியின் வீட்டாருக்குத் தெரிந்திருந்தது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு கிம்ஹானியின் பாட்டி காலமானதால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இதனால் வீட்டில் இருக்கும் நேரங்களில் காதலனுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். “வேலையிடத்தில் நாம் 8 மணிநேரம் ஒன்றாகவே இருக்கிறோம், வீட்டில் இருக்கும் நேரத்தில் எனது பாட்டியின் நினைவுகளுடன் இருக்க அனுமதி கொடு” என்று கிம்ஹானி தனது காதலனிடம் கோரியிருந்தார் என்று உயிரிழந்தவரின் பெரியம்மா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காதலி தன்னைத் தவிர்க்கின்றார் என்ற அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

5 வயதிலேயே தந்தையை இழந்த கிம்ஹானியை, அவரது தாய் நதீகா (வயது 46) பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்துள்ளார். நிர்வாகத் திறமைக்காக விரைவில் பதவி உயர்வு பெறவிருந்த நிலையிலேயே கிம்ஹானிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் கடந்த 6ஆம் திகதி வேதகேவத்த பொது மயானத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றன. தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0