யாழ். மாநகர சபையின் பதில் மேயராக கடமையேற்கின்றார் தயாளன்.!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா கடமை நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில் இன்று தொடக்கம் பதில் மேயராகக் கடமையேற்கின்றார் பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன்.
இன்று 9 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 10 நாட்கள் வரை இவர் பதில் மேயராகக் கடமையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.