உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்துக்குச் செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தத் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஈரானியக் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள், இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர்களுக்கு மனிதாபிமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஒரு மாத கால இலவச விசா வழங்கப்படுகின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான இடர்மிக்க சூழல்கள் ஏற்படும் போது, இத்தகைய மனிதாபிமான முடிவுகள் எடுக்கப்படலாம்.

ஈரானிய மாலுமிகள் தொடர்பான இந்தத் தீர்மானமானது, சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இலங்கைக்குப் பொருந்தக்கூடிய கடல்சார் சட்டங்களை மிகத் துல்லியமாகப் பின்பற்றியே எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை தனது மனிதாபிமானப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதை இது உலகுக்கு வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, இலங்கை யாருக்கும் அடிபணியாது என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது.

இந்த விவகாரத்தைக் கையாள்வதில் இலங்கை அரசு தனது ‘அணிசேராக் கொள்கைக்கு’ இணங்கவே செயற்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினருக்கும் ஆதரவாகவோ அல்லது பாதிப்பாகவோ அமையும் நோக்கத்தில் எடுக்கப்படுபவை அல்ல. இதன் மூலம் சர்வதேச அரசியலில் நடுநிலையைப் பேணுவதோடு, மனிதாபிமானக் கடமைகளையும் இலங்கை முன்னெடுத்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0