உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கத்தி முனையில் நகை திருட்டு; 8 மணிநேரம் கழித்து உதவ வந்த பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை நகை கொள்ளை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகையை அவரது கழுத்திலிருந்து அறுத்த பின்னர் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளதுடன் அரை மணி நேரத்திற்கு அதிகநேரம் மணல் மண் அள்ளி கொட்டியும், இரும்பாலும் தாக்கியுள்ளனர். இதனை சுதாகரித்துக் கொண்ட கணவர் திருடன் ஒருவனை தாக்கியத்தில் திருடன் காயத்துடன் இரத்தம் சிந்த சிந்த தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் பருத்தித்துறை அதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை திருடர்கள் கத்தி முனையில் இவர்களை தாக்கி அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு உதவுவதற்கும் முறைப்பாடு பெற்றுக்கொள்ளவும் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கொள்ளை சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் ஈடுபட்டமை காணொளியில் பதிவாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0