உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மத்திய கிழக்கு போரில் 4 இலங்கையர்கள் காயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்ற நிலைமை காரணமாக நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

காயமடைந்த நால்வரும் சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதோடு, தூதரகங்கள் ஊடாக அவர்களின் நிலைமைகள் குறித்துத் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான ஈரானின் இராணுவ மோதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றன. அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும், இதுவரை நடத்திய தாக்குதல்களுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், கள நிலவரம் வேறாகக் காணப்படுகின்றது.

ஈரானியப் படைகள் தொடர்ந்தும் குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஒன்றின் பாகங்கள் வீழ்ந்ததில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு அபாயகரமான சூழலில், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0