உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) இரவு ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குருநாகல் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 126 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹோமாகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாதுக்கை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

ஹோமாகம குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (07) பகல் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 14 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 325,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0