உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் தொகுதி திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அதிலிருந்து 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து சோதனையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்:

“தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஹெரோயின் மற்றும் கொக்கைனின் மொத்த அளவை உறுதிப்படுத்தியுள்ளது. 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் காணப்படுகின்றது. இதன் பெறுமதி 2.08 பில்லியன் ரூபாவாகும். இது ஒரு மிகப்பெரிய அளவாகும். அத்துடன், இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0